கவிதைகள்




அகமது   மலருது   அருள்வடிவம்   தெரியுது
அச்சமது   அழிந்திட  அஞசாமை  நிலைக்குது
ஆணவம்  அகன்றிட   ஆறுமுகம்   வருகிறான்
ஆக்கமது  தோன்றவே  ஆலயம்  நாடுகின்றேன்
இடுக்கண்   ஒடுங்கவே   இல்வாழ்வு  சிறக்குது
இறைவனே  துணையென  இறுதியில் அறுதியானேன்
ஈகையில்     மனம்நாட  ஈனமதைத்   துறந்தேன்
ஈசன்மகனே  ஈடேறும்  வழியெனக்  கண்டேன்
உள்ளம்  தெளிவுற   ஊர்கோயில்  தெரிந்தது
உயர்ந்தபணி  எதுவென்ற  உண்மை  புரிந்தேன்
மனதினில்  ஒளிபெற்றேன்  மாற்றத்தைத்  தந்தது
மருதங்கேணி  கந்தசாமியார்  மாவருள்  என்கி‌ன்றேன்
எனியவன்   பணிசெய்வதே   என்கடன்   ஆவேன்
எல்லோரும்  நம்புங்கள்  எம்பெருமான்  அருள்தருவான்

                                                                                                         சோதி  

ஆதிமுதல்வன்   பிள்ளையே  ஆற்றுப்படை  தலைவனே !
மருதங்கேனியிலே ஆற்றங்கரையிலே  அமர்ந்த  அழகனே!
குலதெய்வமாய் குடியிருந்து குறைதீர்தருளும் குமரனே!
உன்திருப்பாதம் தினம் பணிந்தோம் திருவுருவே!


மலைமீது குடிகொள்ளும் மீனாட்சி மகனே!
மருதங்கேனி தரைமீதுகுடிகொண்டாயே மருகா!
நலம்வேண்டி நிற்போர்க்கு நிலையான அருள்தருவோனே!
உன்னை தொளுதுண்டு வாழவழி தாருமையா!


இடர்போக்கும் இடைச்சங்க தலைனே இறைமகனே!
வளமான வயலருகே வேல்வடிவான  வேலவனே!
குறையேதுமில்லாமல் குடிவிளங்க குடிகொண்ட கந்தா!
உன்திருத்தலம் பணிசெய்திட எமக்கருள் தருவாயய்யா!

                                                                                                                        சோதி

Aucun commentaire:

Enregistrer un commentaire